ஆலு பாலக்

தேதி: January 7, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பாலக்கீரை - 1 கட்டு
எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 சிறிய பல்
வெங்காயம் - 1
சில்லி பவுடர் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

பாலக்கீரையை கழுவி கட் பண்ணி கொதிநீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுர துண்டுகளாக கட் பண்ணி வேக வைத்து வைக்கவும். கீரையை வடி கட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு பொடியாக கட் பண்ணவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போடவும். வெடித்தவுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும், உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டவும்,சில்லி பவுடர், உப்பு சேர்க்கவும்.
வடிகட்டிய பாலக்கீரையை சேர்த்து 5 நிமிடம் பிரட்டி இறக்கவும்.
சுவையான ஆலு பாலக் ரெடி.


சப்பாத்தி, சாதத்திற்கு சைட் டிஸ் ஆக பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பொதுவாக கீரையை கழுவி விட்டுதானே கட் பண்ண வேண்டும். இல்லையென்றால் சத்துக்கள் வீனாகிவிடும் என்பார்களே.
மேலும் கீரைகளை சமைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க மூடி போட்டு சமைக்க கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
பாலக் கீரைக்கு பரவாயில்லாயா மேடம். விளக்கம் தருவீர்களா பிளீஸ்.

indira

கழுவி, கட் பண்ண எழுத மறந்து விட்டேன்.அப்புறம் கொதினீரில் போட்டு எடுப்பதே நிறம் மாறாமல் இருக்கத்தான். மூடி போட்டும் கூட நான் சமைப்பதுண்டு.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா உமர் உங்க குறிப்பை பார்த்துதான் இன்ட்று ஆலு பாலக் செய்தேன் சூப்பரா இருந்ததுங்க.புளிப்புக்காக மட்டும் நான் கொஞ்சம் லெமன் சேர்த்தேன்.

நானும் இனி லெமன் சிறிது சேர்த்து பார்க்கிறேன்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் எப்பொழுதும் கீரையை வதக்கி அரைத்து செய்வேன்.நேற்று இந்தமுறையில் செய்தேன் நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

நிறைய குறிப்பு செய்வது மிக்க மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று தங்கள் முறையில் ஆலு பாலக் செய்தேன். நன்றாக இருந்தது நன்றி.

indira

ரொம்ப சிம்பிளாக இருக்கும்.அக்காவோட குறிப்பு எப்படி இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்வாய் தானே.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.