அறுசுவை ஆங்கில தளத்தில் பங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க

அன்பு நேயர்களுக்கு,

நீண்ட நாட்களாய் பேச்சளவில் இருந்த அறுசுவை தளத்தின் ஆங்கில வடிவம் இந்த மாதத்தில் வெளிவரவிருக்கின்றது. எப்போதும்போல் உங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, உதவி எல்லாம் இதிலும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

தமிழில் டைப் செய்யத்தெரியாத காரணத்தால், நிறைய நேயர்கள் ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகளை அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். அவை தமிழில் இல்லாததாலும், அவற்றை மொழிபெயர்த்து வெளியிட போதுமான ஆட்கள் இல்லாததாலும் அவற்றையெல்லாம் மறுத்து வந்திருக்கின்றேன். ஆங்கில தளம் வெளியானதும் அதில் நீங்கள் குறிப்புகள் பங்களிப்பு செய்யலாம் என்பதையும் அவர்களுக்கு பதிலாய் கொடுத்து வந்தேன். இனி ஆங்கிலத்தில் குறிப்புகள் கொடுப்போரும் பங்களிப்பினை தொடரலாம்.

அறுசுவை தமிழ் தளத்தில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்துவருகின்றது. இதில் உள்ள ஏராளமான தகவல்களை மொழியாக்கம் செய்ய வேண்டி இருப்பதால், மொழிபெயர்ப்பாளர்கள் நிறைய பேர் தேவைப்படுகின்றனர். நீங்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவராய் இருந்தால், சிறிது நேரம் அறுசுவைக்காக ஒதுக்கக்கூடிய சூழலில் இருந்தால், இந்த மொழிபெயர்ப்பில் நீங்களும் எங்களுக்கு உதவிடலாம். ஆங்கிலம் அறிந்த, மொழிபெயர்ப்பில் உதவிட விருப்பம் உள்ளவர்கள் arusuvaiadmin @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

அறுசுவை வளர்ச்சிக்கு நன்கொடை கொடுக்க இயலாத நிலையை சிலர் வருத்தத்தோடு தெரிவித்திருந்தார்கள். நன்கொடை என்பது கட்டாயம் அல்ல. நான் அந்த பக்கத்தில் குறிப்பிட்டு இருந்ததுபோல், இயன்றவர்கள் இயன்ற தொகையை கொடுத்து உதவலாம். இயலாதபட்சத்தில் வருத்தமே வேண்டாம். தொகையைவிட அதிகம் மதிப்புக் கொண்ட பல்வேறு செயல்கள் மூலம் எல்லோரும் அறுசுவை வளர்ச்சிக்கு உதவிடலாம். எப்படி என்பதை கீழே பட்டியலிடுகின்றேன்.

1. சமையல் குறிப்புகள் பங்களிப்பு. நீங்கள் அறிந்த சமையல் குறிப்புகள், உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் அறிந்த சமையல் குறிப்புகள் இவற்றை அறுசுவையில் வெளியிட்டு அனைவரும் பயன்பெற செய்யலாம். கேமரா வசதிக் கொண்டவர்கள் நீங்கள் சமைக்கும் எந்த உணவினையும் ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். அதேபோல் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை செய்து பார்த்து ருசிப்பவர்கள் தாங்கள் தயாரித்த உணவினை படம் எடுத்து அனுப்பி வைக்கலாம்.

2. கைவினைப் பொருட்களுக்கான பகுதி விரிவுபடுத்தப்படவுள்ளது. இதில் தங்களது திறனை உலகமறியச் செய்ய அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். நீங்கள் அறிந்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். கைவினைப் பொருட்கள் என்பது மட்டுமல்லாமல், மெஹந்தி, கோலம், தையல் என்று பெண்கள் அதிகம் ஆர்வமுடன் ஈடுபடும் விசயங்கள் அனைத்திற்கும் இங்கே வாய்ப்பு கொடுக்கப்படும்.

3. புதிய தளத்தில் இடம்பெறவிருக்கின்ற பல புதிய பகுதிகளுக்கும் உங்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கதை, கவிதை, கட்டுரை, வீட்டுக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் என பல புதிய பகுதிகள் வரவிருக்கின்றன. இதில் எல்லாம் உங்கள் பங்களிப்பினை தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கலாம்.

4. இதுநாள்வரை அறுசுவைக்கென தனியாக விளம்பரங்கள் எதுவும் செய்தது இல்லை. பயன்படுத்துவோர் வார்த்தைகள் மூலமாகவே இந்த தளம் உலகம் முழுவதையும் சென்றடைந்துள்ளது. இன்று இணையம் பயன்படுத்தும் தமிழ் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு அறுசுவை அறிமுகமாகி உள்ளது மறுக்கமுடியாத விசயம். இருப்பினும் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னமும் அதிகம் உள்ளது. இப்போது ஆங்கிலத்திலும் வரவிருப்பதால் இந்த தூரம் பலமடங்காகின்றது.

ஒரு தளத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விசயம், அதற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு, அதனால் வருகைதரும் வருகையாளர்கள் எண்ணிக்கை. இதனை அதிகரிக்க இதுவரை சிறப்பு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், இனி அதிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாக உள்ளது. எனவே இதில் எங்களுக்கு உதவிடும் வகையில், வருகையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உங்களால் இயன்றவற்றை நீங்கள் செய்யலாம். ஆங்கிலத்திலும் இனி அறுசுவை வரும் என்பதால் இதனை எல்லோருக்குமே அறிமுகப்படுத்தலாம். உங்களது blog, மின்னஞ்சல் இவற்றில் எல்லாம் அறுசுவை லிங்க்கை இணைக்கலாம். உங்களுக்கு தெரிந்த ஊடகங்களில், அறுசுவை குறித்த செய்தி வெளியாக வழிவகைகள் செய்யலாம். உங்களால் இயன்ற ஏதேனும் வழிகளில் அறுசுவையை பரப்புவதில் உதவிடலாம்.

5. அறுசுவைக்கு விளம்பர வருவாய் கிடைத்திட நீங்கள் உதவிடலாம். நீங்கள் அறிந்த விளம்பரதாரர்கள், உணவுத்துறை சம்பந்தமான பெரிய நிறுவன உரிமையாளர்கள், நிறுவன பொறுப்பில் இருப்பவர்களிடத்தில் அறுசுவை குறித்து தெரிவித்து, விளம்பரங்கள் கிடைக்க உதவிடலாம்.

இந்த அறுசுவை தளம் உங்களின் தளம் என்பதால் இதனுடைய வளர்ச்சி உங்கள் அனைவருக்கும் பெருமையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் வளர்ச்சிக்கு ஏற்கனவே நிறைய பேர் உழைத்து வருகின்றார்கள் என்பது பெருமையான விசயம். அதில் உங்களையும் இணைத்துக்கொள்ள வாருங்கள் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

தற்போது தமிழில் குறிப்புகள் எழுதுகிறவர்கள் எல்லோரும் இயலுமான அளவு தங்களுடைய குறிப்புகளை ஆங்கிலத்திலும் எழுதினால் மாற்றப்படாமல் இருக்கும் மற்றைய குறிப்புகளை வேறு யாரிடமாவது உதவி பெற்று அதனை ஆங்கிலத்தில் மாற்றுவது உங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் குறிப்புகள் ஆங்கிலத்திலிருந்தால் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிருக்கும் வெளிநாட்டினருக்கும் இதைப்பற்றி கூறி ஏதாவது உதவிகளை அறுசுவைக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வசதியாக இருக்கும் அத்துடன் போதிய விளம்பரங்களும் கிடைக்க வசதியாக இருக்கும் என நான் நம்புகிறேன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நீங்கள் கூறியுள்ளது சரியே. தற்போது குறிப்புகள் வழங்குவோரில் சிலர் தங்களது குறிப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிடுவதாக கூறியிருக்கின்றார்கள். அவர்களின் குறிப்பை நாங்கள் மொழிபெயர்க்கப் போவதில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாதவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவிடத்தான் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். குறிப்புகள் நிறைய இருப்பதால் எல்லாவற்றையும் சில நாட்களில் மொழிபெயர்த்துவிட இயலாது. அதனால் தற்போது ஆங்கில தளத்தினை வெளிக்கொண்டு வரும் அளவிற்கு ஒவ்வொரு பிரிவிலும் சில குறிப்புகளை மட்டும் மொழிபெயர்த்து வெளியிட இருக்கின்றோம். பின்னர் தினமும் சிறிது சிறிதாக குறிப்புகளை சேர்த்துக்கொள்ளலாம் என்பது திட்டம்.

//அறுசுவை தமிழ் தளத்தில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்துவருகின்றது.//எனக்கு விளங்கேல்ல.குறிப்புகளை ஆங்கிலத்து கொண்டுவரப்போறீங்களோ?அருசுவை மொத்தத்தையும் ஆங்கிலத்துக்கு கோடுவரப்போறீங்களோ?

சுரேஜினி இந்த தமிழ் அறுசுவை தளம் அல்லாமல் இதே போல் ஆங்கிலத்திலும் ஒரு அறுசுவை வலைபக்கம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

தமிழ்த்தளம்/ஆங்கிலத்தளம்
ஆங்கிலத்தளம் வருகிறது என்று போட்டிருக்கிறீங்கள் தமிழ்த்தளமும் புதுமாற்றங்களுடன் இந்தமாதத்தில் வந்துவிடும்தானே. இனிமேல் நான் அனுப்பும் சமையல் குறிப்புக்களை ஆங்கிலத்திலும் அனுப்புகிறேன்.

கதையும் எழுதலாம் என்பதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருக்கு, நான் முன்பு கேட்க நினைத்து விட்டுவிட்டேன். என்னிடம் ஒரு கதை தமிழில் எழுதி நீண்ட காலமாக முடிக்காமல் வைத்திருக்கிறேன். இனி முடித்துவிட்டு அனுப்புகிறேன், நல்லதாக இருந்தால் இணைக்கலாம்.

"புதுத் தளங்களின் வருகையை ஆவலோடு காத்திருக்கிறேன்".

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோதரி சுரேஜினி,

இப்பத்தான் உங்க பதிவை பார்த்தேன். (தலைப்புல அட்மின்னு ஒரு வார்த்தை போட்டிருந்தா உடனே பார்த்திருப்பேன். :-))

அறுசுவை தமிழ், ஆங்கிலம் ரெண்டு மொழிகளிலும் வெளிவரும். அதாவது இரண்டும் இரண்டு தனித்தளங்கள் போல்தான் இருக்கும். தற்போது arusuvai.com/tamil என்ற முகவரி தமிழ் தளத்திற்கு இருப்பதுபோல் arusuvai.com/english என்பது ஆங்கில தளத்தின் முகவரியாக இருக்கும். இரண்டு தளங்களும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாக இருக்கும்.

தமிழ் தளமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவரும்.

அண்ணா... மொழிபெயர்க்க என் உதவி நிச்சயம் உண்டு. என்ன வேண்டும் என்று சொல்லுங்க, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து முடிச்சு அனுப்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் முன்வருகிறேன். திருமதி சித்ரா செல்லதுரையின் குறிப்புகளை மொழிபெயர்க்கட்டுமா? அவர் லாகின் செய்வதில்லை என நீங்கள் எங்கோ சொல்லியிருந்தீர்கள். ஆகவே தான் கேட்கிறேன்.

lovely

தயவுசெய்து என்சந்தேகங்களை தீர்கவும்
பதிலளி என்பதில் மட்டும்தான் என்கருத்துக்கள் வெளியாகிறது
ஆனால் கருத்துக்களைத்தெரிவிக்க என்பதில் நுழைந்தால்
என்னுடைய டீட்டியல்தானே வருகிறது ஏன்
தொடர்புக்குஎன்றுள்ளதில் வந்தாலும்
என் கருத்துக்களை கணவில்லை
பின்பு எப்படி நான் கலந்துகொள்வது
ப்லீலீலீஸ் உதவுங்கள்
அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

ஹஹஹஹஹா..இதைத் தான் நான் வருஷகணக்கா கேட்டுட்டிருக்கேன் அதாவது பல த்ரெட்டிலும் பங்களிக்க முடியாது லாக் அவுட் ஆயிருக்கும் கருத்து தெர்விக்க க்லிக்பன்னினா ப்ரொஃபைல் பேஜ் வரும்.
அட்மினுக்கு யு ஏ யியீல் கொஞ்சம் எதிரிகள் உண்டாம் அவங்க செய்ரது இதெல்லாம்

மேலும் சில பதிவுகள்