ஆரஞ்சு சாக்லேட் கேக்

தேதி: January 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
பொடித்த சீனி - 250 கிராம்
முட்டை - 4
பேக்கிங் பெளடர் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
இளஞ்சூடான தண்ணீர் - 5 மேசைக்கரண்டி
ஆரஞ்சு ஜுஸ் பெளடர் - 3 மேசைக்கரண்டி
சாக்லேட் சாஸ் தயாரிக்க:
சிங்கிள் க்ரீம் - 120 மி.லி
சாக்லேட் துண்டுகள் - 250 கிராம்


 

மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து 3 முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
கேக் தயாரிக்கும் விதம்: மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் ஃபுட் ப்ராஸசரில்(food processor) போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக் கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கி விடவும்.
ஆரஞ்சு ஜூஸ் பெளடரையும் தண்ணீரையும் நன்கு கலக்கிக் கொண்டு பின்னர் எசன்ஸையும் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை அவனில் வைத்து 160 டிகிரி C-ல் 25 - 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
கேக் வெந்ததும் வெளியில் எடுத்து ஆற வைக்கவும்.
சாக்லேட் சாஸ் தயாரிக்கும் விதம்: சிங்கிள் க்ரீமை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும். கொதி நிலை வந்ததும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இளகும் சாக்லேட் துண்டுகளை ஒரு மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
சாக்லேட் சாஸ் தயாரானதும் அதை ஆற வைத்திருக்கும் ஆரஞ்சு கேக் மீது சமமாகத் தடவி விடவும்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மேலே விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். சுவையான ஆரஞ்சு சாக்லேட் கேக் தயார்.
அறுசுவையில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் <b> திருமதி. மனோ சுவாமிநாதன் </b> அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோ மேடம்,

தங்களுடைய ஆரஞ்சு சாக்லேட் கேக் பார்க்க மிகவும் சுவையாக இருக்கிறது..ஆனால் இதில்
சிங்கிள் க்ரீம் என்றால் என்ன? அல்லது அதற்கு வேரு பெயர் உண்டா?

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Keerthi

பார்க்க மிக அழகு.ஃப்ட்ஜ் ஐசிங் செய்திருக்கிறேன்,இது மாதிரி ப்ரவுன்,மற்ற கலரிலும் செய்யலாம்.ரொம்ப ஈசியா எல்லோருக்கும் புரியும் வண்ணம் உங்க விளக்கப்படம் உள்ளது. நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மனோ மாமி வாவ் யம்மி யம்மி சூப்பர்.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றாக இருக்கு நான் கண்டிப்பா சண்டே செய்யலாம் என்று இருக்கேன். ஜூஸ் பௌடருக்கு பதில் ப்ரெஸ் ஜூஸ் சேர்க்கலாமா? சுலபமா இருக்கு செய்வதற்க்கு.என் குழந்தைகளுக்கு கேக் என்றால் ரொம்ப பிடிக்கும்.நான் செய்த பின் சொல்கிறேன்.

அன்புள்ள கீர்த்தீஸ்வரி!

பாராட்டுக்கு நன்றி!!
சிங்கிள் க்ரீம் என்பது 20% மட்டுமே கொழுப்புடன் தயாரிக்கப்பட்ட பாலாடை. இதற்கு வேறு பெயரில்லை. double cream, whipped cream இன்னும் பல வகை க்ரீம்கள் உள்ளன. எல்லாமே பல நிலைகளில் புட்டிங், கேக் வகைகள், இனிப்பு சாஸ், இன்னும் பல இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அன்புள்ள ஆசியா!

அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி!!

அன்புள்ள விஜி!

பாராட்டுக்கு நன்றி!!
ஜூஸ் பவுடருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கலாம். அப்படி சேர்க்கும்போது 4 மேசைக்கரண்டி ஆரஞ்சு ஜூஸுடன், நல்ல பழுத்த ஆரஞ்சு பழத்தின் மேல் தோலைத் துருவி 2 மேசைக்கரண்டியும், ஆரஞ்சு எசென்ஸ் ஒரு டீஸ்பூனும் சேர்க்க வேண்டும்.

ப்ரிய அக்கா,
படத்துடன் கூடிய சமையல் போட்டு விட்டீர்கள்.ஆரஞ்ச் சாக்லேட்கேக் அழகு.அதன் மேல் செய்துள்ள ஐசிங் அதை விட அழகு.அக்காவின் சிரிப்பு அழகோ அழகு.ஃபிரீ ஆனதும் செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்.மெயில் பண்ணி இருக்கின்றேன்.செக் பண்ணவும்
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேடம் இன்று உங்களின் ஆரஞ்சு கேக் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி மேடம்.

அன்புள்ள ரைஹானா!

ஆரஞ்சு கேக் நன்றாக வந்ததறிய மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அன்பான பின்னூட்டத்துக்கு என் நன்றி!!