தேங்காய் சட்னி

தேதி: January 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - அரை பல்
சின்ன வெங்காயம் - 2
உப்பு - அரை தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

சட்னிக்கு பொட்டுக்கடலை தவிர மீதமுள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் இட்டு தண்ணீர் ஊற்றி கடைசியாக பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
தாளிப்புக்கு கொடுத்தவற்றை தாளித்து சட்னியில் கொட்டவும். சுவையான தேங்காய் சட்னி இட்லி, தோசை, ஆப்பத்துக்கு நல்ல பொருத்தம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெண் பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி செய்தோம். நன்றாக இருந்தது

அன்புடன்

சீதாலஷ்மி