நாண்

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 6 - 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - அரை கிலோ
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
வெது வெதுப்பான பால் -4 டேபிள் ஸ்பூன்
சீனி - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - அரை அல்லது முக்கால் டீஸ்பூன்
பால் - 150 மில்லி
தயிர் - 150 மில்லி
முட்டை - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டர் அல்லது எண்ணெய் - மேலே தடவுவதற்கு


 

முதலில் வெது வெதுப்பான பாலில் ஈஸ்ட், சீனி சேர்த்து நுரைக்கவைக்கவும். ஒரு பெரிய பவுளில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைக்கவும். மாவின் நடுவில் குழித்து ஈஸ்ட், பால், முட்டை, தயிர், எண்ணெய் சேர்த்து மாவை பிரட்டி, பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.
மாவு உள்ள பவுளை டைட்டாக மூடி வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும். இரு மடங்காக பெருகும்.
கமலா ஆரஞ்சு அளவு உருண்டை பிடிக்கவும், மாவை பரத்தி ஸ்லிப்பர் போல் இழுத்து விடவும். இரண்டை தயார் படுத்தவும்.
முற்சூடு செய்த அவனில் 200 டிகிரி- 300 டிகிரியில் லேசாக எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் 10 - 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இப்படியே இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும். சாஃப்ட் நாண் ரெடி.
சுடச் சுட பட்டர் அல்லது எண்ணெய் தடவி விரும்பிய சைட் டிஸ் உடன் பரிமாறவும்.


அவன் இல்லாதவர்கள், குழிவான அகலமான தவாவில்(shallow fry pan) நாணை தண்ணீர் தடவி ஒட்டி அடுப்பில் பாத்திரத்தை தலை குப்புர நெருப்பில் காட்டி, திரும்ப பேனை நிமிர்த்தி வைத்து வெந்ததும் எடுக்கவும். இதுவும் தந்தூரி நாண் போல் வரும். அலுமினிய பாத்திரம் பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஸியா அக்கா,
நாண் செய்யலாம் என்று இருக்கிறேன். இதில் கண்டிப்பாக முட்டை சேர்க்க வேண்டுமா? இல்லை என்றால் சுவை மாறுபடுமா?

முட்டை சேர்க்காமலும் செய்திருக்கிறேன்,நன்றாக இருந்தது.பரோட்டாவிற்கு எப்படி சில பேர் முட்டை சேர்ப்பார்கள்,சிலர் சேர்க்கமாட்டார்கள் அப்படி தான் இதுவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா நேற்று டின்னருக்கு "நாண்" செய்தேன், நன்றாகயிருந்தது, நாங்கள் வெஜிடேரியன் என்பதால் முட்டையில்லாமல் செய்தேன், முட்டையில்லாததால் ஆயில் அதிகம் தேவைப்பட்டது. நான் எப்பொழுதும் பாலும், தயிரும் each 1/2கப் தான் சேர்ப்பேன், இந்தமுறை உங்கள் குறிப்புப்படி செய்தேன். அவனிலும் இதுவரை செய்ததில்லை, தாவாவில் தான் செய்வேன், இது வித்யாசமாக நன்றாகயிருந்தது. நன்றீப்பா..

அன்புடன் :-).....
உத்தமி :-)

உங்கள் விளக்கமான பின்னூட்டம் மிக்க மகிழ்வைத்தருகிறது.முட்டை சேர்த்தல் பிய்த்து சாப்பிடுவதற்கு இலகுவாக சாஃப்டாக இருக்கும்,பொதுவாக நாண்க்கு முட்டை சேர்ப்பதில்லை.மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று நாண் செய்ய போகிறேன். எவ்வளவு correct temp. என்று சொன்னால் நன்றாக இருக்கும். (நீங்கள் செய்யும் temp…)நீங்கள் 200 – 300 என்று குறிப்பிட்டு இருக்கிங்க அதனால் தான் கேட்டேன்..
அன்புடன்,
கீதா ஆச்சல்

என்னோடதில் 280maximun temp.heat வேறுபடும்.என்பதால் அப்படி கொடுத்தேன்.200 செட் பண்ணுங்க.அடுப்பு சைஸ் பொறுத்து இருக்கு.குவிக்காக ஆகிவிடும்.வெளியே போய் இப்ப தான் வந்தேன்,அதனால் பதில் தர நேரம் ஆகிவிட்டது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா,
எனக்கு சரியா வரவில்லை ஏன்னு தெரியல. அவன்ல வச்சி எடுக்கும்போது சொதப்பிட்டேனு நினைக்கிறேன். மதிய லன்ச் டைம் மாவு ரெடி பன்னினேன். நல்லா உப்பி வந்தது. ஆஹா, நல்லா வரப்போகுது ’நாண்’ என்று நான் நினைதேன். ஆனா டின்னருக்கு வந்து செய்ய எடுத்த போது மாவு அமுங்கி இருந்தது. அதனால் தான் சரியாக வரவில்லை(யோ), சரியாக்கா?
இல்ல வேற ஏதும் காரணமா இருக்குமோ?

indira

என்னாச்சு,உப்பி வ்ந்தால் அருமையாக இருக்குமே.அமுங்கியது எதனால் ?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.