ஆப்பிள் டெஸர்ட்

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

ஆப்பிள் - 4
சீனி - 550 கிராம்
மைதா - 350 கிராம்
முட்டை - 4
கறுவாத்தூள் - 25 கிராம்
ப்ளைன் சோடா அல்லது காஸ் தண்ணீர் - 1/2 லிட்டர்
பேக்கிங் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
கிரீம்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 300 கிராம் சீனி மற்றும் கறுவாத்தூளை போட்டு கலந்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் 250 கிராம் மைதா, 250 கிராம் சீனி, முட்டை, பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்துக் கரைக்கவும்.
இந்த கலவையை நன்கு அடித்துக் கரைத்து தோசை மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ளவும்.
ஆப்பிளின் தோலை சீவி விட்டு நடுவில் உள்ள தண்டை எடுத்து விடவும். பிறகு ஆப்பிளை வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.
நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளை மீதமிருக்கும் மைதா மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
அதன் பிறகு கரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு தோய்த்து எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோய்த்து எடுத்த ஆப்பிள் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த ஆப்பிள் துண்டுகளில் உள்ள எண்ணெயை ஒத்தி எடுத்து விட்டு கறுவாத்தூள், சீனிக்கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
பின்பு ஒரு தட்டில் பொரித்த 3 ஆப்பிள் துண்டுகளை வைத்து அதற்கு இடையில் கிரீமை விட்டு, நடுவில் ஐஸ்க்ரீமை வைத்து பரிமாறவும். சுவையான ஆப்பிள் டெஸர்ட் தயார்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான ஆப்பிள் டெஸர்ட்டை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க சமையல் குறிப்பு எல்லாமே தெளிவா, அழகா விளக்கமா இருக்கு. இந்த ஆப்பிள் டெஸர்ட் பாக்க டோநட் மாதிரியே இருக்கு. நேரம் கிடைக்கும்போது உங்களோட குறிப்புகளை செஞ்சுப் பாக்கணும். உங்க குறிப்புகள் எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

தேவா உங்கள் பாராட்டுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

டோனட் என்று தான் நினைத்தேன்,ஆப்பிள் டெசர்ட் சூப்பர். வித்தியாசமான குறிப்புக்கள் தருவதற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு. ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ. நன்றி.
வாணி
always smile

ஆசியா நலமா இருக்கிறீர்களா?
நீங்கள் எனது ஒவ்வொரு குறிப்பிற்கும் பாராட்டு தெரிவித்துள்ளீர்கள் மிக்க நன்றி.
இது இங்குள்ள உணவு விடுதிகளில் இதைச் செய்வார்கள், எனக்கு அங்கு வேலை செய்யும் ஒரு அண்ணா சொல்லித்தந்தார்.அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிதமான உணவு.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வாணி அடுத்த முறை செய்ததும் நிச்சயமாக ஒரு பாசல் அனுப்பி விடுகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

hello madam,

It looks great,may i know what is karuvathool?

thanx
uma

karuva is cinnamon.

karuvathool-cinnamon powder

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உங்க குறிப்புகள் எல்லாமே எளிமையாகவும் ரொம்ப சிம்பிளாகவும் நன்றாகவும் இருக்கு. நான் வீக்கெண்ட்ஸில் செய்து பின்னுட்டம் தருகிறேன். மேலும் இதே போல் நல்ல ரெசிப்பிகள் குடுங்க.

ஹாய் வத்சலா மேடம் இதில் சோடா தண்ணீர் ஊற்றி கலக்கனுமா அதை பற்றி இதில் குறிப்பிடலையே.மற்றபடி வித்தியாசமாக இருக்கு.ஜலீலா

Jaleelakamal

அமராக் பதில் வழங்கியமைக்கு நன்றி.
விஜி உங்கள் பாராட்டிற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லவும்.
ஜலீலா தேவையான பொருட்களில் ப்ளைன் சோடா அல்லது காஸ் தண்ணீர் என்று கொடுத்திருக்கிறேன்.
இதில் ஏதாவது ஒன்றை விட்டு கரைக்கவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"