சிமிளி

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - 2 கப்
வறுத்த வேர்கடலை - 3/4 கப்
எள் - 100 கிராம்
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - 6
நெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் கேழ்வரகு மாவினை இட்லி பானையில் வைத்து அவிக்க வேண்டும். வேர்க்கடலை தோலை நீக்கி சுத்தம் செய்யவும்.
எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். பொரிந்தவுடன் இறக்கி விடவும். ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
பிறகு கல் உரலில் வேர்கடலையையும், எள்ளையும் போட்டு இடிக்க வேண்டும். இரண்டும் நன்றாக மாவானபின், அவித்த கேழ்வரகு மாவினை அதனோடு சேர்த்து இடிக்க வேண்டும்.
எல்லாம் ஒன்றாக கலந்ததும் கடைசியில் வெல்லத்தைப் போட்டு இடிக்க வேண்டும்.
எல்லாம் ஒன்றாய் கலந்து கெட்டியாக, அழுத்தமான அல்வா பதத்தில் வரும் போது நெய், ஏலப்பொடி போட்டுக் கலந்து உரலில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த சத்தான இனிப்பு இது.


மேலும் சில குறிப்புகள்