முளைக்கீரை மசாலா

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 2 பேருக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கீரை - 1 கட்டு,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - அரை கப்,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
கீரையை சுத்தம் செய்து, அலசி, பொடியாக நறுக்கவும்.
தேங்காய், சீரகம், தனியா, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
கீரையையும் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கீரை வெந்து நன்கு கொதித்ததும், இறக்கவும்.
சப்பாத்தி, சாதத்திற்கு நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்