மைக்ரோ அவன் பனீர் நட்ஸ் அல்வா

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 15 சிறிய வில்லைகள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - 250 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
பால் - 2 மேசைக்க்ரண்டி,
முந்திரி - 10,
பாதாம் - 10,
பிஸ்தா - 10,
ஏலக்காய் - 3.


 

பாதாமை தண்ணீரில் போட்டு ஓவனில் அரை நிமிடம் வைத்து எடுத்து தோல் உரிக்கவும்.
பாதாம், முந்திரி, பிஸ்தாவை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.
ஏலக்காயை தோல் நீக்கி அத்துடன் சேர்க்கவும். பனீரையும், சர்க்கரையையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
எல்லாம் கலந்து வந்ததும் எடுத்து பால் விட்டு கலக்கி மைக்ரோஅவன் பாத்திரத்தில் கொட்டி மைக்ரோ நடுத்தரத்தில் (பாதி வெப்பம்) 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கிளறி விடவேண்டும்.
கெட்டியாகவில்லை என்றால் இன்னும் ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
தேவைப்பட்டால் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம்.
சுவையான, சுலபமான பனீர் நட்ஸ் அல்வா ரெடி.


மேலும் சில குறிப்புகள்