பட்டாணி - உருளைக்கிழங்கு மசாலா

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 2 பேருக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணி - 1 கப் (200 கிராம்),
உருளைக்கிழங்கு - அரை கிலோ,
தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 3,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயம், தக்காளியை சுமாரான துண்டுகளாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆறியதும் கரகரப்பாக அரைக்கவும்.
மீதி எண்ணெயை ஊற்றி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
2 தம்ளர் தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வேக விடவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும்.


பூரி, சப்பாத்தி வெகு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் செல்வி மேடம்.இன்ரு உஙகல் பட்டனி உருழகிலங்கு மசாலா செய்தேன் மிக அருமையான சுவை நன்றி மேடம்.