மாம்பழ பாயசம்

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குண்டு மாம்பழம் - 1,
பால் - 1/2 லிட்டர்,
கார்ன் ஃபிளவர் மாவு - 1 மேசைக்க்ரண்டி,
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
முந்திரி - 10,
நெய் - 1 தேக்கரண்டி.


 

மாம்பழத்தை தோல் சீவி, கொட்டையை நீக்கி சதைப் பகுதியை எடுத்து கூழ் போல் மசித்து கொள்ளவும் (மிக்ஸியிலும் அடிக்கலாம்).
பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
கால்வாசி சுண்டியதும், கார்ன்பிளவர் மாவை அரை டம்ளர் பாலில் கரைத்து ஊற்றவும்.
மாம்பழக்கூழை பாலில் சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து சிறிது, சிறிதாக சர்க்கரை சேர்க்கவும் (அப்படியே கொட்டினால் பால் திரிந்து விடும்).
ஏலக்காயை பொடித்து சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ரொம்ப தண்ணியாகவோ, ரொம்ப கெட்டியாகவோ இல்லாமல் இறக்கவும்.
கலர்ஃபுல்லான, சுவையான மாம்பழ பாயாசம் ரெடி.


மாம்பழ இனிப்பை பொறுத்து சர்க்கரை அளவை கூட்டி, குறைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதுக்கு கார்ன் மாவு இல்லைன்னா என்ன செய்ய?
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா,
கார்ன் மாவு இல்லைன்னாலும் பரவாயில்லை. திக்காக வரணும்னு தான் மாவு கரைச்சு விடறது. பாலையே இன்னும் கொஞ்சம் சுண்ட வைத்தால் போதும். அப்படி இல்லைன்னா அரிசி மாவும் கரைத்து விடலாம். மாம்பழ பாயசமா? ஜமாய்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா நேத்து ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போகவேண்டியதால் எதாவது செய்து போகனும் ( வெறும் கையோட எப்படி போறது ??!!!! ) அவங்களுக்கு எதாவது செய்ய நினைத்தேன். நான் சாப்பாடு செய்யும் போதே இவர் இருந்த 2 பழத்தையும் காலி செய்திட்டார்:((
அடுத்தமுறை தான் பழம் வாங்கினா செய்யனும்

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
இதுதான் சில முக்கியமான சாமான்களை மறைத்து வைக்கணும்ங்கிறது. இங்க மட்டும் என்னவாம், முந்திரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை எல்லாம் கண்னுக்கு படாமல் வைக்கணும். அதெப்படியோ எறும்பை விட நுனுக்கமாக வைத்திருக்கிர இடத்தை கண்டுபிடிச்சிடுவாங்க. இதில் அப்பாவும், பையனும் கூட்டு வேறே...(ஃப்ரெண்டு தப்பிச்சிட்டான்னு சொல்ல மாட்டேன்:-))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பிரெண்ட் ஒன்னும் தப்பிக்கலை. வர வீகென்ட் வருவாங்க. மெனுவில இதுவும் இருக்கு.
// முந்திரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை
சேம் பிஞ்ச்!!! இங்கயும் அதே கதை தான்
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..