திருவாதிரைக் கூட்டு

தேதி: January 9, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 200 கிராம்,
காய்கள் - 2 கப் (அவரவர் விருப்பம் போல் கலந்தது),
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
---------------------------
காய்ந்த மிளகாய் - 5,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி,

தாளிக்க:
---------------
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
நெய் - 1 மேசைக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி.


 

துவரம்பருப்பை கழுவி மஞ்சள் தூள், சிறிது எண்ணெய் (அப்போதுதான் மஞ்சள் தூள் நன்கு பிடித்து கலராக இருக்கும்.) சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு (குழைய) வேக விட்டு எடுக்கவும்.
காய்களை தோல் சீவி ஒரே அளவான துண்டுகளாக நறுக்கவும் (காய்கள் நிறைய இருக்க வேண்டும்).
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கரகரப்பாக பொடித்து வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வெந்த பருப்பை நன்கு மசித்து, நறுக்கிய காய்கள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வேக விடவும்.
எல்லாக்காய்களும் வெந்ததும், கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
புளி நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொடித்து வைத்துள்ள பொடியை அரை டம்ளர் தண்ண்ணீரில் கரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
வாணெலியில் எண்ணெய், நெய் சேர்த்து காய விட்டு, கடுகு, பெருங்காயம் பொரியவிட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி குழம்பில் கொட்டவும். குழம்பு தண்ணியாக இல்லாமல், சேர்ந்தாற் போல் இருக்க வேண்டும்.


இந்த குழம்பை அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் சுண்ட வைத்து சாப்பிட அதன் ருசியே தனி. விருப்பம் இருப்பவர்கள் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இன்னும் கொஞ்சம் ருசி கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

திருவாதிரை என்பது எப்போவரும்?இது விழாவா?பொங்கல் விழாவா ?தயவு செய்து தப்பாக எடுத்துக்கொள்ளாமல் சொல்லவும்,எங்களுக்கு பொங்கல் அன்று,வெண்பொங்கல்,எல்லக்காயும் சேர்த்து செய்யும் கூட்டு,சர்க்கரை பொங்கல் ஃப்ரெண்ட் வீட்டில் இருந்து வரும்,ஆனால் அந்த குழம்பில் பருப்பு இருக்குமா நினைவில்லை.செய்து பார்க்கணும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நலமா? மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்ஷத்திரம் வரும் அன்று சுமங்கலி பெண்கள் முழு நாளும் ஏதும் சாப்பிடாமல் இருந்து, மாலையில் அந்த நட்ஷத்திரம் வந்ததும் மஞ்சள் சரடு, களி, கச்சாயம் அல்லது அடை, கூட்டு எல்லாம் செய்து படைத்து பிறகு தான் சாப்பிடுவார்கள். மறுநாள் காலை ஆருத்ரா தரிசனம் என்று சிவன் கோயில் சென்று வழிபட்டு வந்து சரடு கட்டிப்பார்கள். இந்த வருடம் நாளைக்கு திருவாதிரை.
இதில தப்பாக எடுத்துக்க என்ன இருக்கு? தெரிஞ்சிக்க தானே கேட்கிறீர்கள்.
களி, கச்சாயம் ஏற்கனவே குறிப்பு கொடுத்துள்ளேன். இது இரண்டும் கொடுக்கலைன்னு இன்று கொடுத்தேன்.
நீங்களும் சும்மா செய்து பாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும். நான் கூட நாளைக்கு சும்மா செய்வேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நிச்சயம் செய்து பார்க்கிறேன்.விளக்கம் சொன்னது குறித்து மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.