help me

hello friends,
வணக்கம்.
எனக்கு 48 நாள் ஆகுது. ரொம்ப பசிக்குது. ரொம்ப பசிக்கும் போது என்ன சாப்பிடனும். உடம்பெல்லாம் சோர்வாக தான் இருக்குமா? walking எந்த மாதத்தில் இருந்து போக வேண்டும். இப்ப வீட்டுக்குள் நடக்கலாமா?
நன்றி
ராதா

ஹாய் ராதா கன்சீவா இருக்கிஙளா என்னோட வாழ்த்துகள் பல கோடி.சிலபேருக்கு ஆரம்பதில் இருந்தே பசிக்கும்.இது ஒன்னும் பிரச்சனை இல்லை உடம்பும் சோர்வா இருக்கும் சிலருக்கு ஆரம்பதில இருக்கும் சிலருக்கு கடைசியில் இருக்கும்.
நீங்கள் ஒன்னும் பயந்திட வேண்டாம்.உங்களுக்கு எது பிடிகுதே அது எல்லாம் சாபிடுங்க (பப்பாசி.அன்னாசி வேண்டாம்) வேலைக்கு பொறதை தள்ளி போடுங்க.3 மாதம் ரொம்ப கவனமா இருங்க.பாரமா எதுவும் தூக்க வேண்டாம்.மாடிப் படி ஏறுவதை கூடியளவு தவிருங்க.நிறய தண்ணீர் குடியுங்க யூஸ் குடியுங்க.

இது உங்களுக்கு முதல் குழந்தயா ராதா.
கர்ப காலத்தை நல்லா எஞ்ஜோய் பண்ணுங்க

அன்புடன்
துஷி

48 நாள் ஆகிவிட்டதென்று கர்ப்பம் தானென்று தானாக கணக்கு போட்டுவிடாதீர்கள் லேபில் செக் பன்னிவிட்டு உறுதி படுத்துங்கள்...வாழ்த்துக்கள்.
பசிக்கும் தான் பசி பசி பசியாகவே இருக்கும்..பசிக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்..பசி வரும் முன்னயே சத்தாக எதையாவது குடித்து விட்டால் நல்ல பசியில் வேண்டாததை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
சத்து மாவு பொடி காய்ச்சி குடிப்பது, பழ ஜூஸ்கள்,,காய்கறிகள்,மீன் இறைச்சி அப்படி எது வேனா சாப்பிடுங்க.
வாக்கிங் எப்பவுமே போகிறவர் தான்னா மெல்ல மெல்ல தினசரி நடக்கலாம்...ஆனால் மருத்துவரை கண்டு முதல் ஸ்கேனிங் செய்வார்கள் இப்போ அது முடிந்த பின் நடங்க.
அதில்ல இப்ப தான் வாக்கிங் போகிற பழக்கம் என்றால் மெல்ல முதல் நாள் 10 நிமிடம் 1 வாரம் கழித்து 20 நிமிடம் என படிப்படியாக ஓரளவு ஸ்பீடில் மட்டும் நடங்க...கொஞ்சம் அசதியா இருந்தாலும் அங்க எங்காவது உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டு நடங்க..வீடு வேலையும் அப்படி தான் எது வேனா எவ்வளவு வேனா செய்யலாம்..ஆனால் நம் உடம்பை பற்றி நாமே தெரிந்து வைத்திருக்க வேண்டும்..உடம்பு டயர்ட் ஆகுது என்று தோன்றினால் உடனே நிறுத்தி விட வேண்டும்.

ஹலோ அக்கா தங்கள் பதிலுக்கு நன்றி. இது என்னோட முதல் குழந்தை. அதனால் தான் பல விஷயங்கள் அறுசுவையில் தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு சந்தேகம் இப்பமே ஒரு பக்கமாக தான் படுக்க வேண்டுமா?
நன்றி
ராதா

ஹாய் ராதா நீங்கள் இப்பவே ஒரு பக்கமாக படுக்க தேவை இல்லை.ஆனால் திரும்பி படுக்கும் போது அப்படியே படுத்த படி திரும்பாமல் எலும்பி மறுபக்கம் திரும்பி படுப்பது நல்லது.இப்பவே நீங்கள் செய்து கொண்டு வந்தால் அப்புரம் கடைசி மாதங்களில் கஷ்ரம் இருக்காது.குப்புற படுக்க வேண்டாம்.

அன்புடன்
துஷி

ராதா தாய் ஆனதர்க்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்.
உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க. நல்லா சாப்பிடுங்க.
எந்த டாக்டர பார்க்குரிங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்