சீஸ் மக்ரோனி

தேதி: January 10, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீஸ் - 25 கிராம் அல்லது 2 ஸ்லைஸ்,
மக்ரோனி - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
தேங்காய் துருவல் - 1/4 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
நறுக்கிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி,
நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.


 

மக்ரோனியை கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் வடித்து தண்ணீரில் அலசி, வடிகட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வடிகட்டிய மக்ரோனி சேர்த்து கிளறவும்.
நன்கு சூடேறியதும் தேவையான உப்பு தூள், தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து, நன்கு கிளறி, கரண்டியால் சமமாக பரப்பி அழுத்தவும்.
கட்டியான சீஸ் எனில் துருவியும், ஸ்லைஸாக இருந்தால் சன்னமான நாடா போல் நறுக்கியும், பரப்பி வைத்துள்ள மக்ரோனி மேல் தூவி, ஒரு மூடியால் மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
2, 3 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், சீஸ் லேசாக உருகி பரவியிருக்கும்.
கிளறாமல் அடுப்பிலிருந்து இறக்கி அப்படியே வில்லைகளாக நறுக்கி பரிமாறவும்.


அவனில் செய்வதாயிருப்பின், எல்லாம் சேர்த்து கிளறிய பின், ஒரு பெரிய தட்டில் பரப்பி, சீஸை தூவி, அவனில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பச்சைமிளகாயை குழந்தைகள் சாப்பிட்டு விடுவார்களென பயமிருந்தால், பச்சை மிளகாயிற்கு பதிலாக மிளகு தூள் தூவிக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்