கீரை மிளகு பொரியல்

தேதி: January 10, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பூண்டு - 5 பல்,
கடுகு - அரை தேக்கரண்டி,
மிளகு - அரை தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

கீரையை சுத்தம் செய்து, கழுவி, பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், பூண்டை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கி, உப்பு தூவி, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
தண்ணீர் சுண்டி, கீரை வெந்ததும், பொடித்த மிளகு தூள் தூவி, கிளறி இறக்கவும்.


எண்ணெயில்லாத சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்