மணத்தக்காளி காய் வற்றல்

தேதி: January 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மணத்தக்காளி காய் - 1/2 கிலோ,
தண்ணீர் - 1 லிட்டர்,
உப்பு - 1 தேக்கரண்டி.


 

தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.
கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, உப்பு, மணத்தக்காளி காய் சேர்த்து உடனே மூடி வைக்கவும்.
15 நிமிடம் கழித்து, நீரை வடித்து, காயை வெயிலில் காய வைக்கவும்.
ஈரமில்லாமல் நன்கு காயும் வரை (ஒரு வாரம் வரை) காய வைத்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.


வற்றலை குழம்பும் வைக்கலாம், நெய்யில் பொரித்து, பொடியாக்கி, சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். குழந்தை பெற்றவர்களுக்கு வாரமிருமுறை இந்த பொடி கொடுத்தால் கர்ப்பப்பை புண் ஆறும், குழந்தைக்கும் பாலிருக்கும்.

மேலும் சில குறிப்புகள்