பனீர் டிக்கா மசாலா

தேதி: January 11, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் துண்டுகள் (அமுல்)- 250 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு
முந்திரி - 10-15
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கசூரி மேத்தி பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நாண்ஸ்டிக் பானில் பனீர் துண்டுகளை பொரித்து எடுக்கவேண்டும்.
அதே பானில் வெங்காயம், இஞ்சி, முந்திரிப்பருப்பு வதக்கி ஆற விடவும். மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மசால், உப்பு, சில்லி பவுடர் போட்டு கொதிக்கவிடவும். வெங்காய வாடை அடங்கியதும், பனீர் துண்டுகளை சேர்த்து பிரட்டவும், கசூரி மேத்தி பவுடர் சேர்த்து பிரட்டி இறக்கவும். கொத்தமல்லி இலை தூவியும் அலங்கரிக்கலாம்.
சூடான சுவையான பனீர் டிக்கா மசாலா ரெடி.


இதனுடன் பீஸ் விருப்பப்பட்டால் சேர்த்து செய்யலாம். நாண், சப்பாத்தி, பரோட்டா, ப்ரெட்-க்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கசூரி மேத்தி பவுடர் என்றால் என்ன மேடம். அதற்கு வேறு பெயர் ஏதாவது இருக்கா சொல்லுங்க மேடம்

கசூரி மேத்தி பவுடர் - காய்ந்த வெந்தயக்கீரை பொடி,நான் வாங்கியது pakistan product,அது சேர்க்காமலும் பீஸ் சேர்த்து செய்யலாம்.,என் மகனுக்கு பிடித்த என்னோட ரெசிப்பியில் இதுவும் ஒன்று.அப்படியே north indian taste இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப நன்றாக இருந்தது, என்னோட பேவரிட் அயிட்டம் நான் அடிக்கடி செய்வேன் உங்க முறை வேற மாதிரி இருந்தது நன்றாக டேஸ்டியாகவும் இருந்தது. ரொட்டிக்கு ரொம்ப நல்ல காபினேஷன்.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியக்கா இந்த ரெஸ்பியை இப்பதான் செய்து முடிச்சேன்..சூப்பரா இருக்கு நன்றி..நான் எக்ஸ்ட்ரா சின்னதா வெங்க்காயம் ஒரு தக்காளியையும் வதக்கி அரத்துவிட்டேன் எனக்கு அதிக கிரேவி வரனும்னு.. இப்பவே சாப்பிட ஆசை ஆனா பையன் எழுந்தாச்சு தூங்கியதும்தான் சப்பாத்தி போடனும் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யாராவது நம் ரெசிப்பியை செய்து பின்னூட்டம் அனுப்பும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்,இதனை யாரும் சமைக்கலாமிலும் கொடுத்து இருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.