கெட்டி சட்னி

தேதி: January 11, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 3 கப்
பொட்டுக்கடலை - கால் கப்
பச்சைமிளகாய் - 5
சின்னவெங்காயம் - 4
கறிவேப்பிலை - 5 இலைகள்
உப்பு - 3/4 தேக்கரண்டி
தண்ணீர் - தெளிக்க


 

முதலில் அம்மியில் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை தட்டி அதில் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை தேவைக்கு உப்பும் சேர்த்து அரைக்கவும்.
தண்ணீர் தெளித்தால் போதும். சட்னி கெட்டியாக இருக்க வேண்டும். மிகவும் ருசியான கெட்டி சட்னி தயார்.


கெட்டி சட்னியை அம்மியில் அரைப்பது தான் ருசி. விருந்தினர்கள் இருந்தால் கொஞ்சம் அதிகமாக மாவு அரைக்கும் கிரையிண்டரில் மொத்தமாக அரைத்தாலும் அதே சுவை தரும். இதற்கு இட்லி செம்ம அருமையாக இருக்கும். பூப்போன்ற இட்லியும் கெட்டி சட்னியும் மிளகாய் சட்னியும் சேர்ந்தால் அமோகமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள் சொன்ன பின் குறிப்பை பார்த்து இந்த பின்னூட்டம் எழுதுகிறேன்,அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா.உங்களை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தேன் 5 வரிக்கு மிஞ்சாது உங்க பதிவு ஆனால் அதிலுள்ள தெளிவு டீசென்சி என்ன அழகு என்று யோசித்தேன்..பிடித்ததை கண்டால் பட்டென பாராட்டும் உங்கள் குணம்..நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் உங்களிட.உங்களுடன் பேச ஆசையாக உள்ளது

இன்று கெட்டி சட்னி செய்தேன். நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி

நன்றி செல்வி..நல்ல பஞ்சு இட்லிக்கு நல்லா இருக்கும்