சுரைக்காய் கட்லெட்

தேதி: January 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுரைக்காய் - 1 (சிறியது),
உருளைக்கிழங்கு - 3,
மைதா மாவு - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 4,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
ப்ரட் தூள் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சுரைக்காயை தோல் சீவி, துருவி, பிழிந்து வைக்கவும்.
உருளைகிழங்கை தோலுரித்து மசித்து வைக்கவும்.
பிழிந்து வைத்த சுரைக்காயுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
மைதா, மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, கெட்டியாக கரைத்து வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை வட்டமாக தட்டி, கரைத்த மைதா கலவையில் நனைத்து, ப்ரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
எண்ணெயில் பொரிக்காமல் தோசைக்கல்லிலும் சிறிது எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கலாம்.
தொட்டுக்கொள்ள தக்காளி சாஸுடன், மாலை நேர சிற்றுண்டி தயார்.


மேலும் சில குறிப்புகள்