பொட்டேட்டோ சாப்ஸ்

தேதி: January 11, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 300 கிராம்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு
சில்லி பவுடர் - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்
சோம்புத்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு - அரை ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
முட்டை - 1 அல்லது மைதாமாவு 2 டேபிள் ஸ்பூன்.
ப்ரெட் க்ரெம்ப்ஸ் - 1 கப்


 

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான துண்டுகளாக்கி உப்பு, கொடுத்த மசாலா தூள்களை சேர்த்து ஊற வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நாண்ஸ்டிக் பேனில் பிரட்டி பிரட்டி ஓரளவு வேக வைத்து வைக்கவும்.
பின்பு முட்டையை நன்கு பீட் செய்து அதில் உருளைகிழங்கை டிப் செய்து ப்ரெட் கிரெம்ப்ஸ் பிரட்டி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து பொரித்து எடுக்கவும்.முட்டை சேர்க்காதவர்கள் மைதாவை கெட்டியாக கரைத்து கிழங்கை டிப் செய்து ப்ரெட் கிரெம்ப்ஸ் பிரட்டி பொரித்தெடுக்கலாம்.
இப்பொழுது சுவையான பொட்டட்டோ சாப்ஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஸியா அக்கா,
பொட்டேடோ சாப்ஸ் மிகவும் அருமையாக இருந்த்து.. நான் இதே போல் கலிஃபளவரிலும் இன்று செய்தேன்.. சுவையாக இருந்த்து.
அன்புடன்,
கீதா ஆச்சல்

நான் கொடுத்தது எனக்கே மறந்து விட்டது.நினைவுபடுத்தியமைக்கு,பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.