எளிமையான முறையில் அழகிய ஹேர் பேண்ட்

தேதி: January 12, 2009

5
Average: 4.6 (7 votes)

 

பச்சை நிற மீடியம் ஃபர் - 3x3 செ.மீ
நூற்கண்டு
ஊசி
எலாஸ்டிக்
பஞ்சு

 

பச்சை நிற மீடியம் ஃபர்ரை மேலே குறிப்பிட்டுள்ள அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எலாஸ்டிக்கின் நடுப்படுதியை நடுவிரலால் பிடித்துக் கொண்டு அதன் இரு முனைகளையும் இணைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். எலாஸ்டிக் வட்டமாக இருக்கும்படி முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
பஞ்சை சற்று நீளமாக திரித்துக் கொண்டு அதை எலாஸ்டிக்கில் முடிச்சு போட்டிருக்கும் பகுதியின் நடுவில் விட்டு இரண்டாக மடக்கி சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
சுருட்டிய பஞ்சை மீடியம் ஃப்ரின் நடுவில் வைத்து வட்டமான எலாஸ்டிக் பகுதி மேலே தெரியும்படி வைத்துக் கொள்ளவும்.
ஊசியில் நூலை இரட்டையாக கோர்த்துக் கொள்ளவும். பஞ்சு உள்ளே வைத்த மீடியம் ஃபர் துணியின் ஏதாவது இரண்டு எதிர்எதிர் முனையை இணைத்து ஊசியால் தைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அடுத்து மற்றொரு இரண்டு முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
பிறகு முடிச்சு போட்டு இருக்கும் நான்கு பக்க இடைவெளியை சாதாரணமாக தைப்பது போல் தைத்து விடவும்.
எளிதில் செய்யக்கூடிய அழகிய ஹேர் பேண்ட் தயார். இந்த அழகிய ஹேர் பேண்டை செய்து காட்டியவர், திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகாக இருக்கு.என் மகளுக்கு முன்பு நான் எல்லா கலரும் வாங்கி கொடுத்து இருக்கிறேன்.சின்னக்குழந்தைகளுக்கு போனி போட்டு வைத்தால் அசத்தலாய் இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக அழகாக இருக்கிறது சாந்தி. பாராட்டுக்கள்.;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta