கத்திரிக்காய் மிளகு குழம்பு

தேதி: January 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கத்திர்க்காய் - 3
2. வெங்காயம் - 1
3. தக்காளி - 1
4. தயிர் - 3 மேஜைக்கரண்டி
5. உப்பு
6. மிளகு - 3 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
9. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க


 

வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும்.
மிளகு பொடி ஆக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், கத்திரிக்காய் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும், தயிர் விட்டு கலந்து, மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தேவைக்கு தண்ணீர் விட்டு மூடி போட்டு காய் வேக விடவும்.
பின் திரந்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


சூடான சாதம், அப்பலத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்றைக்கு இந்த கத்தரிக்காய் மிளகு குழம்பு தான் செய்தேன்.ஏன்பா இது கொஞ்சம் தண்ணியா தான் இருக்குமா.இல்லாட்டி நல்லா சுண்ட வைத்து சாப்பிடனுமா?ஆனால் நான் கொஞ்சம் தளர ஊத்தி தான் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்துச்சு.என் கணவரும் நல்லா இருக்கு என்று சொன்னார்.தங்களின் குறிப்புக்கு நன்றி.

இது குழம்பு மாதிரியே வராது சுகன்யா.... மசாலா மாதிரி வரும். நல்லா கொதிக்கனும். எனக்கும் முதல்ல தண்ணியா தான் வந்தது. என்னவருக்கு பிடிச்சதால அடுத்த முறை நல்லா சுண்ட வெச்சுட்டேன். குளிருக்கு மிளகாய் தூள் போடுவதை விட இது இதமாக இருக்கு. செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி சுகன்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா