கிள்ளூ சாம்பார்

தேதி: January 12, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

துவரம்பருப்பு - 150 கிராம்,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8,
சீரகம் - 1/4 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைத்து மசிக்காமல் 2 தம்ளரில் கரைத்து வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் வெந்த பருப்பு, புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து புளி வாசனை போன பிறகு இறக்கவும்.
குழம்பு கெட்டியாக இல்லாமல் ரசத்திற்கும் குழம்பிற்கும் இடைப்பட்ட பதத்திலிருக்க வேண்டும்.


காய்கறிகள் இல்லாத போதும், காய்ச்சல் விட்ட பிறகும் இந்த சாம்பார் வைத்தால் நன்றாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள எழுமிச்சை ஊறுகாய், அப்பளத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சாம்பார் எங்கம்மா அடிக்கடி வைப்பாங்க. நீங்க சொன்னாமாதிரி உடம்பு சரியில்லாதபோதும், எங்காவது வெளியூர் போயிட்டு திரும்பிய நிலையிலும் (எங்க சின்ன வயதில் அப்பல்லாம் வெளியூரில் இருந்து திரும்பும்போது, ஹோட்டலில் சாப்பிட்டு வருவது ரொம்ப குறைவு) சாதம் வைத்து,இந்த சாம்பார்தான் கொடுப்பாங்க. காய்கறிகள் இல்லாதபோதும் கைகொடுக்கும் அருமையான சாம்பார் இது. பசி நேரத்தில் சூடான சாதத்தில் இந்த சாம்பாரை ஊற்றி ,எலுமிச்சை ஊறுகாயை தொட்டு சாப்பிட தேவார்மிதமாய் இருக்கும்.
இட்லி, தோசைக்கும் மிக பொருத்தமான சாம்பார். பழைய நினைவுகளை கிளறிவிட்டதற்கு நன்றி!