புளியில்லா முருங்கைக்கீரை குழம்பு

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
முருங்கைக்கீரை - 2 கப் (ஆய்ந்து சுத்தம் செய்தது)
முருங்கைக்காய் - 2
அவரைக்காய் அல்லது கத்தரிக்காய் - 200 கிராம்
தேங்காய்ப் பூ - 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
பச்சரிசி - 1 ஸ்பூன்,
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2


 

வறுக்கக் கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்களை சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப் பூவை தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், கத்தரிக்காயை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் வறுத்த பாசிப்பருப்பையும், முருங்கைக்கீரையையும் தனித்தனி கிண்ணங்களில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை அரைக்கவும். தேங்காய்ப் பூவை தனியாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த மசாலாவை 2 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
இதில் வெந்த காய்கள், கீரையை சேர்க்கவும்.
நன்கு இரண்டு முறை பொங்கி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை கரைத்து விடவும்.
உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்துக் கொட்டவும்.


இந்தக் குழம்பில் மிளகுக் காரம் தூக்கலாகத் தெரியும். சிவப்பு மிளகாய் 1 அல்லது 2 தான் சேர்க்க வேண்டும். சாதத்தில் ஊற்றிப் பிசைந்து, தொட்டுக் கொள்ள கூழ் வடகம் வறுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் கொதிக்க விட்டால் குழம்பு கடுத்துப் போய், ருசி மாறி விடும். கவனமாக இருக்கவும். புளி சேர்க்காததால் அதிக நேரம் ஆனால் கெட்டுப் போய் விடுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் மதிய உணவுக்கு உடனே செய்து, சிறிது நேரத்திலேயே சூடாக சாப்பிடுவதற்கு உகந்தது. ரொம்பவும் கொதிக்க விட்டால் குழம்பு கடுத்துப் போய், ருசி மாறி விடும். கவனமாக இருக்கவும். புளி சேர்க்காததால் அதிக நேரம் ஆனால் கெட்டுப் போய் விடுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் மதிய உணவுக்கு உடனே செய்து, சிறிது நேரத்திலேயே சூடாக சாப்பிடுவதற்கு உகந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

வெஜ் ரெசிப்பி நிறைய செய்ய ஆசை,உங்க அனுபவத்திற்கு இன்னும் ரெசிப்பி கொடுக்கலாம்,உங்க நேட்டிவ் நெல்லையா?இது ஒரு வித்தியாசமான நல்ல குறிப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா, பின்னூட்டம் கொடுப்பதில் நீங்கள்தான் ராணி.

அம்மா வழியில் நெல்லைதான், எப்படி கண்டு பிடிச்சீங்க?

பட்டிமன்றங்களில் என் பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப் படுத்துவதுண்டு. நன்றி, ஆஸியா.

சென்ற இரண்டு வாரமாக எழுத்துரு பிரச்னை,
(கட்டம் கட்டமாக வந்து கொண்டு இருந்தது). அட்மின் அவர்களுக்கு மெயில் அனுப்பி, அவரது யோசனைகளை பின் பற்றி, வேறு எழுத்துரு பதிவிறக்கம் செய்த பின் இப்போது சரியாகி விட்டது.

நிறைய ரெஸிப்பி கொடுக்க ஆசைதான். என்னைப் பொருத்த வரை புதுமையான ரெஸிப்பிகளை விட வீட்டில் வழக்கமாக செய்யும் ரெஸிப்பிகளை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். ஆனால் அதே குறிப்புகள் மற்றவர்களும் கொடுத்து இருப்பார்களோ என்று ஒரு தயக்கம், ஆனால் இனி நான் என்ன முறையில் செய்கிறனோ, அதை அப்படியே கொடுக்க நினைத்து இருக்கிறேன்.

படித்துப் பார்த்து, (முடிந்தால் செய்தும் பார்த்து) பின்னூட்டம் கொடுங்கள்.

நன்றி,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உங்க எழுத்துனடையில் நெல்லை வாடை தெரிந்தது,உடன் பதில் கொடுத்தது குறித்து மகிழ்ச்சி.என் கணவர் வீகெண்ட் தான் வந்து செல்கிறார்,வேலை மாற்றல் காரணமாக,குழந்தைகளும்,காலையில் பள்ளி சென்றால் மாலை வருவதால் ,நேரம் இப்போ கிடைக்கிறது.அதனால் அறுசுவைக்கும் செலவிட நேரம் கிடைக்கிறது,நான் வெஜ் செய்தாலும்,தினமும் ஒரு காயும் செய்து விடுவேன்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.