வெஜிடபுள் குழி பணியாரம்

image

வழங்கியவர் : Vijitvm

தேதி : செவ்வாய், 13/01/2009 - 19:40

ஆயத்த நேரம் : 10

சமைக்கும் நேரம் : 15

பரிமாறும் அளவு : 5

0
No votes yet
Your rating: None
 

 

  • இட்லி தோசை மாவு - 1 கப்
  • உப்பு - தேவைகேற்ப
  • காய்கறிகள் - 1/4 கப்(விரும்பியது)
  • எண்னெய் - 2 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 1
  • கறிவேப்பிலை - கொஞ்சம்

 

  • காய்கறிகள்: பீன்ஸ், பட்டாணி, கேரட், வெங்காயம்.
  • முதலில் காய்களை ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  • மாவில் வதக்கிய காய்கறிகளை போட்டு நன்றாக கலக்க வேண்டும். மாவு இட்லி மாவு பதமாக இருந்தால் நன்றாக சாஃப்டாக வரும்.
  • குழி பணியார கடாயில் முதலில் கொஞ்சம் எண்னெய் விட்டு அதில் ஒரு சின்ன கரண்டி மாவை குழிகளில் விடவும்.
  • சிவக்க வந்தவுடன் அதை திருப்பி போட்டு சிவக்க வந்தவுடன் எடுக்கவும்.
  • சூடாக சட்னியுடன் பரிமாறவும். தாளிக்காமலும் செய்யலாம். வேண்டுமென்றால் தாளிக்கலாம்.

Note:

இந்த வெஜ் குழிபணியாரம் மாலை வேளை ஸ்நாகாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காய்கறிகள் சாப்பிடதாவர்கள் கூட கண்டிப்பா இதை சாப்பிடுவார்கள். தோசைமாவு புளித்து இருந்தால் நல்ல டேஸ்டியாக இருக்கும். தீடிர் விருந்தாளிக்கு இதை ஸ்நாக்காக கொடுக்கலாம். இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.