மொச்சை பயிறு குழம்பு | arusuvai


மொச்சை பயிறு குழம்பு

food image
வழங்கியவர் : Vanitha Vilvaar...
தேதி : செவ்வாய், 13/01/2009 - 19:57
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • 1. மொச்சை பயிறு - 1 கப்
 • 2. வெங்காயம் - 1
 • 3. தக்காளி - 1
 • 4. தனியா தூள் - 1 தேக்கரண்டி
 • 5. உப்பு
 • 6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • தாளிக்க:
 • 1. கடுகு
 • 2. சீரகம்
 • 3. உளுந்து
 • 4. கடலை பருப்பு
 • 5. கறிவேப்பிலை
 • 6. கொத்தமல்லி
 • அரைக்க:
 • 1. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
 • 2. மிளகாய் வற்றல் - 5
 • 3. முந்திரி - 4
 • 4. பாதாம் - 4

 

 • அரைக்க கொடுத்தவற்றை தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
 • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
 • பயிறை இரவே ஊற வைத்து வேக வைக்கவும்.
 • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
 • இதில் அரைத்த மசாலா, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, வேக வைத்த பயிறு, தேவையான நீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே திரண்டு வரும்போது எடுக்கவும்.
இதே போல் கொண்டகடலையிலும் செய்யலாம்.இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..வாணி அசத்தறிங்க

தினம் தினம் நல்ல ரெசிப்பியா குடுத்து அசத்தறிங்க.
நல்லா இருக்கு.

Viji

ரொம்ப நன்றி விஜி. பாத்து நல்ல குறிப்புன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேன்... செய்து சாப்ட்டு சொல்லுங்க. :) ரொம்ப சந்தோஷ படுவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா

ஹாய் வனிதா
இன்று உங்களுடைய மொச்சைப்பயிறு குழம்பு வைத்தேன் நல்ல இருந்தது தேங்காய்துருவலுக்கு பதில் பால் ஊற்றினேன் மற்றபடி எல்லாம் அதேப்போலே செய்தேன் நன்றாக வந்தது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க

மிக்க நன்றி மஹா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா