பிதுக்கு பருப்பு சுண்டல் - 1

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மொச்சை கொட்டை - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

மொச்சைக் கொட்டையை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பருப்பை மட்டும் பிதுக்கி எடுக்கவும்.
பிதுக்கிய பருப்பை அரை லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, பருப்பை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், வேக வைத்த மொச்சை பருப்பு, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


மாலை நேர சுண்டலுக்கும், சாப்பாட்டுக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்