பிதுக்கு பருப்பு சுண்டல் - 2 | arusuvai


பிதுக்கு பருப்பு சுண்டல் - 2

food image
வழங்கியவர் : senthamizh selvi
தேதி : செவ்வாய், 13/01/2009 - 20:30
ஆயத்த நேரம் : 5 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு.

 

 • பச்சை மொச்சை கொட்டை - 1/2 கிலோ,
 • சின்ன வெங்காயம் - 5,
 • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி,
 • பூண்டு - 4 பல்,
 • இஞ்சி - ஒரு துணுக்கு,
 • கறிமசால் தூள் - 1/2 தேக்கரண்டி,
 • தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி,
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
 • கடுகு - 1/2 தேக்கரண்டி,
 • கறிவேப்பிலை - சிறிது,
 • கொத்தமல்லி தழை - சிறிது,
 • பெருங்காயம் - சிறிது,
 • உப்பு - தேவையான அளவு,
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி.

 

 • மொச்சைக் கொட்டையை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பருப்பை மட்டும் பிதுக்கி எடுக்கவும்.
 • பிதுக்கிய பருப்பை அரை லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, பருப்பை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
 • இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய இஞ்சி, பூண்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் நன்கு வதங்கியதும், வேக வைத்த மொச்சை பருப்பு, தேங்காய்த்துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
மாலை நேர சுண்டலுக்கும், சாப்பாட்டுக்கும் நன்றாக இருக்கும்.இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..