பிதுக்கு பருப்பு புளிக்குழம்பு

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மொச்சை கொட்டை - 1/2 கிலோ,
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி,
அரிசி - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

மொச்சைக் கொட்டையை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பருப்பை மட்டும் பிதுக்கி எடுக்கவும்.
பிதுக்கிய பருப்பை அரை லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, பருப்பை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
புளியை ஒன்றரை தம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வெறும் வாணலியில் மிளகாய், கடலைப்பருப்பு, அரிசி, சீரகம், தனியாவை சிவக்க வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவலையும் சேர்த்து வறுத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா பிதுக்கு பருப்பு என்றதும் ஒன்றுமே புரியல அப்பரம் தான் நாம் புளி குழம்பு , கருவட்டு குழம்பிற்கு செய்யும் ரங்கூன் மொச்சை, காரமணி (அதிரா கௌபி) பச்சை மொச்சை போன்றவையை வெண்ணீரில் போட்டு ஊறவைத்து பிதுக்கி எடுத்தால் உள்ளே இருந்து பருப்பு வரும் இல்லையா, பிதுக்கு பருப்பு என்று தனியா பேர் இருக்குன்னு நினைத்து கொண்டேன், ஹா ஹா லேட்டா தான் புரிந்தது.

ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலா,
பிதுக்கு பருப்புன்னா என்னன்னு தெரியாம கேட்க கூடாதுன்னு தான் முதலிலேயே அதனோட விளக்கத்தை சொல்லி விட்டேன். இருக்கற நாட்டிற்கு தகுந்த மாதிரி படிச்சியா ? :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.