இஞ்சி க்ரீன் டீ

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. க்ரீன் டீ பேக் - 1
2. இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
3. சர்க்கரை (அ) சீனி - ருசிக்கு


 

பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி கலந்து கொதிக்க விடவும்.
இதில் சர்க்கரை கலந்து வடிகட்டவும்.
கப்பில் டீ பேக் வைத்து இந்த சூடான நீர் சேர்த்து 2 நிமிடம் விட்டு குடிக்கவும்.


இதையே சுக்கு சேர்த்தும் செய்யலாம். இஞ்சி, சுக்கு அளவை உங்கள் ருசிக்கு ஏற்றார் போல மாற்றி டீ போடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள வனிதா இந்த குறிப்பிற்க்கு நன்றி.கீரீன் டீ பேக் வாங்கி அப்படியே இருக்கு.குடிக்க பிடிக்காம..
இந்த முறையில் செய்து குடிக்க முடியும் என்று நினைக்கிரேன்.நன்றி.
அன்புடன் பர்வீன்.

நன்றி பர்வீன்பானு... முயர்ச்சித்து பார்த்து பின்னூட்டம் தாருங்கள். என்னவருக்கு நான் எப்போதும் சுக்கு சேர்த்து தருவேன், அவருக்கு தனியாக க்ரீன் டீ குடிக்க பிடிக்காது, இப்படி குடுத்தால் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா டீ நன்றாக இருந்தது.எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்.

சவுதி செல்வி

மிக்க நன்றி செல்வி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவருக்கு எப்பவும் க்ரீன் டீ தான் கொடுப்பேன். அத்துடன் இன்று உங்க குறிப்பினை பார்த்து, இஞ்சி சேர்த்து கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார் வனிதா. இது ஏன் இவ்வளவு நாளா மிஸ் பண்ணினோம்னு இருக்கு! நன்றி!

ஹலோ அக்கா, தினமும் எங்கள் வீட்டில் இஞ்சி கிரீன் டீ தான். அக்கா டீ தூள் போட்டு கொதிக்க வைக்கலாமா?(டீ பேக் இல்லாவிட்டால்)

நன்றி சாய் கீதா... அண்ணா'கு பிடிச்சா போதும். :) கிரீன் டீ உடம்புக்கும் ரொம்ப நல்லது.

அரசி.... தாராலமா தூள் போடலாம். ஆனா இந்த மாதிரி டீ'லாம் strong'அ போட கூடாது. லேசா தான் கொதிக்க வைக்கனும். அப்பொ தான் டீ bag போடுற மாதிரி இருக்கும். நன்றி அரசி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா, என்னோட ஹஸ்ஸு டீ டார்க் ஆக இல்லையே என்று கூறுகிறார். அதற்கு தான் டீ பேக் இல்லாமல் தூள் போட்டால் கலர் வருமா?

நல்லா கொதிக்கர தண்ணியில் சேர்த்த கலர் வரும். ரொம்ப கொதிச்சா கொஞ்சம் கசப்பா இருக்கர மாதிரி இருக்கும். எனக்கு சரியா சொல்ல தெரியல, ருசி எப்படி இருக்கும்னு. நீங்க ஒரு முறை போட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்குதான்னு. :) கலர் வரணும்'னா நல்லா கொதிக்கர தண்ணியில் தூள் போட்டு 2 - 3 நிமிஷம் மூடி வையுங்க அப்பரம் வடிச்சுடுங்க. கொதிக்க வேண்டியதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா மனுஷன் டையட்டில் இருக்கிறார். அதனால கசப்பா இருந்தாலும் பரவாயில்லை. என்று கூறுகிறார். நன்றி அக்கா

ஹஹஹஹா.... அப்போ கூட 2 தேக்கரண்டி போட்டு குடுங்கோ.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
ஏதோ நல்லதுன்னு சொல்றாங்களேன்னு க்ரீன் டீ நானும் வாங்கிட்டு வந்து குடிக்க பிடிக்காம அப்படியே இருக்கு! : )
உங்க மெத்தெட் இன்னைக்கு ஈவீனிங் போய் ட்ரை பண்ணி பார்க்கறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா உங்க இஞ்சி கிரீன் டீ செய்தேன் ரொம்ப அருமையான டேஸ்ட்.இனிமேல் யாராவது வந்தா நம்மை திறமை காமிக்க வேண்டியது தான் :)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அப்பா... இலா சொன்னா சரி. :) மிக்க நன்றி இலா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வனிதா
இஞ்சி க்ரீன் டீ அருமையா இருந்திச்சு.நான் எதிர்பார்கவே இல்லை.ரொம்ப நன்றி.

அன்புடன் பர்வீன்.

முதல்ல இந்த குறிப்புக்கு பின்னூட்டம் தந்தது நீங்க தான். இப்போ இந்த வார சமையல் முடிவுல கடைசியா வந்தும் பின்னூட்டம் தந்து அசத்திட்டீங்க. மிக்க நன்றி பர்வீன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இந்த பதிவு படிச்சு சிரித்து விட்டேன்.ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு.(சும்மா இது தாஷ்சுக்கு...)

அன்புடன் பர்வீன்.

what is block tea bag that means tea powder

Black டீ? அப்படின்னா சாதாரண டீ தான், பால் சேர்க்காம செய்வது. டீ பேக் கிடைக்கும், வாங்கி சுடு தண்ணீர்'ல போடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா