கொத்துக்கறி வேர்கடலை மசாலா

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு: 4-- 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கொத்துக்கறி(மட்டன்) - கால் கிலோ
பச்சை வேர்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2
உப்பு - தேவைக்கு


 

கொத்துக்கறியை நன்கு அலசி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் செய்து வைக்கவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும். வேர்க்கடலையையும் அலசி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, தக்காளி, மல்லிஇலை, மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு சில்லி பவுடர், மஞ்சள் தூள் சேர்க்கவும். கொத்துக்கறி சேர்த்து பச்சை வேர்க்கடலையை சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், தேங்காய் முந்திரி அரைத்தது சேர்த்து பிரட்டி 3 விசில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும் நீர் நின்றால் வற்றவைத்தால் கொத்துக்கறி வேர்க்கடலை மசாலா ரெடி.
சுவையான கொத்துக்கறி வேர்க்கடலை மசாலாவை சாதம், சப்பாத்தி உடன் சாப்பிடலாம்.


பச்சை வேர்க்கடலை என்பதால் ஒரு வித இனிப்புச்சுவையுடன் வித்தியாசமாய் இருக்கும், கடலூரில் கடலை சீசனில் இது செய்வது வழக்கம். இது போல் முந்திரிப்பருப்பும் போட்டு செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் ஆசியா ஹா ஹா ஓமர் முந்திரி பருப்பு போட்டு செய்வோம், இது பாக்கிஸ்தானியரின் ஸ்பெஷல் டிஷும் கூட ஆனால் வேர்கடலை நான் கேள்வி பட்ட தில்லை அடிக்கடி அவிபோம், சாலட் செய்வோம், புளி சாதத்தில் போடுவோம், சில சமையலுக்கு முந்திரி பருப்பு இல்லை என்றால் வேர்கடலை பயன் படுத்தலாம்.
இந்த முறையும் வித்தியாசமாக இர்க்கு செய்து பார்க்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

மாமா கடலூரில் ஆயில் மில் வைத்திருந்தாங்க,பச்சை கடலை வரும் சமையம் இப்படி சமைப்பார்கள்.கடலூர் விருதாச்சலம் முந்திரி ஃபேமஸ், அங்கு முந்திரி விளைவதால் முந்திரியும் போட்டு சமைப்பார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.