வெண் பொங்கல்

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தரமான பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தண்ணீர் - 2.5 கப்
பசும்பால் - அரை கப்
தாளிக்க:
நெய் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முந்திரிப் பருப்பு - 10
பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப்


 

பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும். அரிசியை ஊறவைக்கவும்
அரிசியையும், பருப்பையும் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து 2.5 கப் தண்ணீரும் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் பாலை கலந்து விடவும். நெய் காயவைத்து அதில் சீரகம், மிளகு, முந்திரிப்பருப்பு இஞ்சியை தாளித்து சாதத்தில் கொட்டவும்.
தேங்காயையும் கலந்து தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.


இதனையெல்லாம் கொஞ்சமாக ஒருவருக்கு ஒரு சிறிய கப் என்ற அளவில் சமைத்து சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அலுத்து விடும் இது ஹோட்டல் பொங்கல் டேஸ்டில் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று தளிகாவின் குறிப்புகளில் இருந்து வெண் பொங்கல் செய்தேன்.
அறுசுவையில் வெண் பொங்கல் என்ற தலைப்பில் நிறைய பேர் கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு குறிப்பிலும் சின்ன சின்ன வித்தியாசங்கள்.
தளிகாவின் குறிப்பின்படி பால் மற்றும் தேங்காய் சேர்த்து செய்து பார்த்தேன். வித்தியாசமான சுவை.
நன்றி, தளிகா

அன்புடன்

சீதாலஷ்மி