ஸ்ட்ஃப்டு தக்காளி

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெங்களூரு தக்காளி - 4,
உருளைக்கிழங்கு - 2,
பெரிய வெங்காயம் - 1
பனீர் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
துருவிய சீஸ் - 1/2 கப்,
ப்ரட் - 2 ஸ்லைஸ்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


 

தக்காளியின் மேல் பாகத்தை வட்டமாக வெட்டி, உள்ளே இருப்பனவற்றை சுரண்டி எடுத்து விட்டு, உட்புறம் லேசாக உப்பு தடவி, கவிழ்த்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
ப்ரட், பனீர் இரண்டையும் உதிர்த்து, உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, தக்காளிக்குள் இக்கலவையை அடைத்து மேலே சீஸ் தூவவும்.
தக்காளி மீது சிறிது எண்ணெயோ, நெய்யோ தடவி, அவனில் வைத்து சீஸ் உருகும் வரை (5 - 8 நிமிடங்கள்) பேக் செய்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்