ஸ்பைசி முட்டைகோஸ்

வழங்கியவர் : asiya omar
தேதி : வியாழன், 15/01/2009 - 00:45
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
- முட்டை கோஸ் - கால் கிலோ
- டால்டா அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வெங்காயம் - 1
- சில்லி பவுடர் - கால் அரைஸ்பூன்
- வற்றல் - 1
- உப்பு - தேவைக்கு
- சீனி - பின்ச்
- லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
- வெங்காயம், முட்டை கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் அல்லது டால்டா விட்டு சீரகம், வற்றல் கிள்ளி போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். முட்டைகோஸை சேர்க்கவும். சில்லி பவுடர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். உப்பு, பின்ச் சீனி சேர்த்து லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டவும்.
- சுவையான ஸ்பைசி முட்டைகோஸ் ரெடி. இதை சாதம் சப்பாத்தி உடன் பரிமாறவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
நான் உங்களின் கோஸ் பொரியல் செய்து பார்தேன்.கோஸின் பச்சை வாடை போக மாடேங்கற்து நான் என பண்ணற்து???????
நட்புடன்,
அம்மு.
சிறியது அல்லது மீடியம் சைஸ் என்றால் ஈசியாக வதங்கிவிடும்,அப்படி வாடை அடித்தால் ஒரே வழி தாளிப்பதற்கு முன் ஆவியில் இட்லி பாத்திரத்தில் வேகவைத்து தாளிக்கவும்.சூப்பராக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
இன்று தங்களின் இந்த குறிப்பை தான் சைடிஷ்ஷாக செய்தேன்.நன்றாக இருந்தது.தேங்காய் சேர்த்து தான் செய்வேன்.அதனை சேர்க்காமல் செய்தேன்.நன்றாக இருந்தது.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.
பின்னூட்டத்திற்கு நன்றி.பக்கத்தில் உள்ள நார்த் இந்தியன் ரெச்டாரண்டில் சப்பாத்திக்கு இது தருவாங்க,ட்ரை பண்ணினேன் அதே மாதிரி வந்தது.உடனே கொடுத்து விட்டேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா அக்கா,
நான் நேற்று இந்த ஸ்பைஸி முட்டைகோஸ் செய்தேன். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருந்தது. செய்வதற்கும் ஈஸியா இருந்தது. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆஸியா மேடம் ஸ்பைசி முட்டைகோஸ் செய்தேன் நன்றாக இருந்தது,சாதத்திற்கு செய்தேன் சூப்பரா இருந்தது நன்றி.
கவி,செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா அவர்களுக்கு, இக் குறிப்பை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. ப்ரெட்டுடன் வைத்து சாப்பிட்டோம் அருமை. நன்றி உங்களுக்கு.
மிக்க நன்றி.பின்னூட்டம் அனுப்பியமைக்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.