வேப்பிலை இஞ்சி (வயிற்று பூச்சிக்கு)

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

இஞ்சி - 100 கிராம்
தேன் - இரண்டு மேசைக்கரண்டி
கொழுந்து வேப்பிலை - மூன்று மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
உப்பு - ஒரு கல்
சர்க்கரை - அரை தேக்கரண்டி


 

இஞ்சியை தோலெடுத்து மண் போக கழுவி அதில் வேப்பிலை, உப்பு, ஆறிய வெந்நீர் சிறிது சேர்த்து நன்கு அரைத்து ஒரு டீ வடிகட்டியில் வடிக்கவும்.
வடித்த சாற்றை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கீழே வெள்ளை நிற நஞ்சு உறைந்திருக்கும் மேலே உள்ள இஞ்சி வேப்பிலை சாறை எடுத்து அதில் தேன், சர்க்கரை கலந்து ஒரு மேசைக்கரண்டி அளவு கொடுக்கவும்


குழந்தைகள் நிறைய இனிப்பு வகைகள் சாக்லேட் எல்லாம் சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் இது போல் அரைத்து ஒரு மேசைக்கரண்டி அளவு கொடுத்தால் நல்லது. எப்படியும் டாக்டர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாக்கு பூச்சி மருந்து கொடுக்க சொல்வார்கள். அப்படி வேப்பிலை கிடைப்பவர்கள் இதை கொடுக்கலாம்.
குழந்தைகள் என்றில்லை பெரியவர்கள், அபார்ஷன் ஆனவர்களும் இதை குடிக்கலாம். கொழுந்து வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலை பொடியாக உள்ளதா பார்த்து எடுத்தும் பயன்படுத்தலாம்

மேலும் சில குறிப்புகள்