மிளகு கஷாயம்

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மிளகு - இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு டம்ளர்
தேன் - ஒரு தேக்கரண்டி


 

மிளகை நன்கு வறுத்து கொள்ளவும்.
ஒரு டீ போடும் பாத்திரத்தில் வறுத்த மிளகை போட்டு தண்ணீர் சேர்த்து தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விட்டு இரண்டு கரண்டியாக வற்ற விடவும்.
அந்த வற்றிய கஷாயத்தில் குழந்தைகளுக்கு என்றால் தேன் கலந்து கொடுக்கவும்.
பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம்.


ஜுரம், சளி, இருமல், இருப்பவர்கள் இதை போட்டு குடித்தால் நல்ல இதமாக இருக்கும். மிளகு உடம்புக்கு ரொம்ப நல்லதும் கூட, திடீர் அலர்ஜி, தடிமனான வீக்கம் ஏற்பட்டவர்கள் மூன்று மிளகை மென்று விழுங்கினால் சரியாகும்
இந்த மிளகு கஷாயத்தை அப்படியே ஒரு வாயில் குடிக்க கூடாது. கொஞ்ச கொஞ்சமா நாக்கில் வைத்து சாக்லேட் சாப்பிடுவது போல் குடிக்கனும். தொண்டை கரகரப்பாக இருக்கும் போது இரண்டு கிராம்பையும் சேர்த்து வறுத்து கொதிக்க விடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நாங்கள் இதனோடு வெற்றிலையும் சேர்த்து அவிய போடுவது வழக்கம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜீலீலா அக்கா,
எப்படி இருக்கேங்க?
என் ஹஸ்க்கு ஒரே இருமலா இருக்கு. வீட்டுல கஷாயம் வச்சுகுடுக்கிறேன். ஆனா ஆபிஸ்ல இருமலா வருது, எல்லார் முன்னாடியும் இரும்ப ஒருமாதிரி இருக்காம். அதுக்கு என்ன அக்கா பண்ணுற்து.
be healthy

be healthy