வடை அவியல்

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வடை செய்ய:
கடலைப் பருப்பு - 1/2 கப்
பட்டாணிபருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 6
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 3 கொத்து
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2கப்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2
தாளிக்க:
பெரிய வெங்காயம் - 1/2 பாகம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

இரண்டு பருப்பு வகைகளையும் ஒன்றாக கலந்து (பட்டாணி பருப்பு இல்லையென்றால் கடலைப்பருப்பு மட்டும் 1 கப்) 3மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பை வடிகட்டியில் கொட்டி தண்ணீரை முழுவதுமாக வடிக்கவும்.
வடிகட்டிய பருப்போடு மிளகாய் வற்றல், சீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
சின்னவெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் பொடியாக வெட்டி மாவில் கலந்து பிசையவும்.
பிசைந்த மாவை 1 ரூபாய் அளவிலான வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம் 2 நிமிடம் சேர்த்து வதக்கவும்.
1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பொரித்த வடைகளை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் பாதியாக வற்றியதும் அரைத்த மசாலா, மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து ட்ரை ஆனதும் இறக்கவும். ரசம் சாதத்திற்கு நல்ல சைட் டிஷ்.


மீதமான பருப்பு வடைகளை கொண்டும் செய்யலாம். பெரிய வடைகளாக இருந்தால் நான்காக வெட்டி சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்