பாம்ஃப்ரெட் ஃப்ரை

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு: 6-8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முழு வெள்ளை வாவல் மீன் - 6-8(1 கிலோ)
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
லைம் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி


 

ஒரு கிலோவிற்கு 6-8 மீன் வருவது போல் பார்த்து வாங்கவும். இது முழு மீனாக பொரிப்பதால் சைஸ் சிறியதாக இருந்தால் நல்லது.
சுத்தம் செய்யும் போது தலையை நீக்காமல், நாடிப்பகுதியோடு வயிற்றில் உள்ள கசடை நீக்கிவிடவும். மீனின் இரண்டு பக்கத்திலும் இரண்டு கீறி விட்டுக்கொள்ளவும். மஞ்சள் தூள், உப்பு போட்டு கழுவவும். நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
எண்ணெய், மீன் தவிர எல்லாப்பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
கழுவிய மீனில் அரைத்த மசாலை ஒரு போல் மீன் மேல் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
ஒரு சாலோ ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு மூன்று மூன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான பாம்ஃப்ரெட் ஃப்ரை ரெடி. இதனை வெஜிடபிள் சாலட் அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்