வெங்காய சட்னி (வெள்ளை பணியாரத்திற்கு)

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பெரிய வெங்காயம் - 6,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 8,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 2 மேசைக்க்ரண்டி.


 

பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய், புளி, சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்தவற்றை ஊற்றி, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.


மேலும் சில குறிப்புகள்