அகத்திக்கீரை - 1

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அகத்திக் கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 12
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
அரிசி களைந்த நீர்(2வது - 3வது முறை களைந்த நீர்) - 3 டம்ளர்
உப்பு - தேவைக்கேற்ப


 

அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.
மீதமுள்ள களைந்த நீரில், கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், லேசாக நசுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு, குக்கரில் வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
வெந்த தண்ணீரை வடிக்க வேண்டாம். தண்ணீரும் கீரையுமாக சேர்த்தே சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம்.


தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு அகத்திக்கீரை பொருத்தமான உணவாகும். அரிசி களைந்த நீரில் கீரையை கழுவி,வேக வைப்பதால் கீரையின் கசப்புச் சுவை குறையும். அரிசி களைந்த நீரில் வேக வைப்பதால் சத்து கூடும். அகத்திக் கீரை ரத்ததில் உள்ள விஷத் தன்மையை முறிக்கும் என்று கூறுவார்கள், அதே சமயம் அடிக்கடி சாப்பிட்டால் ரத்தத்தையே முறிக்கும் என்றும் சொல்வார்கள். அதனால், 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை, சமைத்து சாப்பிடலாம். கீரை மெதுவாக ஜீரணம் ஆகும் என்பதால், இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments


அடடா! இது ஈஸியா இருக்கும் போலிருக்கே!

துவாதசி அன்னைக்கு செய்ய முடியாது!

விரதம் இல்லாத நாள்ள செஞ்சுக்க வேண்டியதுதான்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...