அகத்திக்கீரை பொரியல்

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அகத்திக்கீரை - 1 கட்டு
சிவப்பு மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 12
தேங்காய்ப் பூ - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை


 

சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.
பின் பொடியாக அரியவும். அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போடவும்.
அரிந்து வைத்துள்ள சின்னவெங்காயத்தைப் போட்டு, வதக்கவும். வெந்த கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து, கிளறவும். தேங்காய்ப் பூவையும் சேர்த்து, கிளறி இறக்கவும்.


தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு அகத்திக்கீரை பொருத்தமான உணவாகும். அரிசி களைந்த நீரில் கீரையை கழுவி, வேக வைப்பதால் கீரையின் கசப்புச் சுவை குறையும். அரிசி களைந்த நீரில் வேக வைப்பதால் சத்து கூடும். அகத்திக் கீரை ரத்ததில் உள்ள விஷத் தன்மையை முறிக்கும் என்று கூறுவார்கள், அதே சமயம் அடிக்கடி சாப்பிட்டால் ரத்தத்தையே முறிக்கும் என்றும் சொல்வார்கள். அதனால், 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை, சமைத்து சாப்பிடலாம். கீரை மெதுவாக ஜீரணம் ஆகும் என்பதால், இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எங்காத்துல அகத்திகீரை தேங்காய், பயத்தம் பருப்பு போட்டு ஜினி போட்டு செய்வோம்!

வெங்காயம் போட்டு செஞ்சு பாக்கறேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...