சேனைக்கிழங்கு மசியல்

வழங்கியவர் : Vijitvm
தேதி : வெள்ளி, 16/01/2009 - 19:00
ஆயத்த நேரம் : 10
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 5
- சேனைக்கிழங்கு - 1 கப்
- பச்சைமிளகாய் - 4
- லெமன் ஜீஸ் - 1 தேக்கரண்டி
- தாளிக்க:
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 1
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- உளுந்து - 1/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- இஞ்சி - 1 துண்டு
- சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மசிய வேக வைக்கவும்.
- வெந்தபின் தாளிக்க வேண்டியவையை தாளித்து அதில் சின்ன துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்துநன்றாக வதக்கி வெந்த சேனைக்கிழங்கில் கொட்டவும்.
- லெமன் ஜூஸ் விட்டு நன்றாக கலக்கவும். இதை சூடு சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Note:
இந்த சேனை மசியலை பிரசவித்த தாய்மார்களுக்கும் கொடுக்கலாம். இதே மாதிரி கருணை கிழங்கிலும் செய்யலாம். சேனை வேகவில்லை என்றால் நன்றாக மத்தால்/மாஷரால் மசிக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
8 நிமிடங்கள் 35 sec முன்பு
21 நிமிடங்கள் 20 sec முன்பு
46 நிமிடங்கள் 57 sec முன்பு
51 நிமிடங்கள் 33 sec முன்பு
ஒரு மணி நேரம் 1 min முன்பு
ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் முன்பு