வெல்ல அவல்

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி அவல் - 200 கிராம்,
வெல்லத் தூள் - 100 கிராம்,
நெய் - 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
ஏலக்காய் - 2.


 

அவலை சுத்தம் செய்து, கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெல்லத்தை 1 கை தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
வெல்லம் கரைந்து கொதிக்கும் போது, ஏலக்காய் தூள், அவல் சேர்த்து நன்கு கிளறவும்.
உதிரியாக வந்ததும், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கலக்கி சாப்பிடவும்.


புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காலையில் இது போல் செய்து சின்ன சின்ன உருண்டைகளாக்கி, வாழை இலையில் வைத்து தருவார்கள்.

மேலும் சில குறிப்புகள்