உப்பு நார்த்தங்காய்

வழங்கியவர் : senthamizh selvi
தேதி : வெள்ளி, 16/01/2009 - 19:48
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- நார்த்தங்காய் - 12
- கல் உப்பு - 100 கிராம்.
- நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
- உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
- நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
- மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
- இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
- பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும்.
- அப்போது எடுத்து டப்பாவில் வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
Note:
இதை காய வைத்திருப்பதே ஒரு அழகு. கயிறு கட்டி அதில் வரிசையாக தொங்க விட்டிருப்பார்கள்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
8 நிமிடங்கள் 18 sec முன்பு
8 நிமிடங்கள் 54 sec முன்பு
14 நிமிடங்கள் 13 sec முன்பு
49 நிமிடங்கள் 52 sec முன்பு
55 நிமிடங்கள் 15 sec முன்பு
ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு