கடலைப்பருப்பு பாயசம்

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 5
பால் - 1 கப்
ஏலகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி


 

கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
பின்பு வறுத்த கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்பு ஆறியதும், அதனுடன் தேங்காய்ப்பூ, 5 முந்திரிப்பருப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
இந்த வெல்லக் கரைசலை திரும்பவும் அடுப்பில் வைத்து அரைத்த கடலைப்பருப்பு விழுதை சேர்த்து விழுது வேகும் வரை கொதிக்க விடவும்.
பாயாசம் கொதித்து வந்ததும் ஒரு கப் சூடான பாலை சேர்க்கவும்.
ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.
சூடாகப் பரிமாறவும்.


வெல்லத்திற்குப் பதிலாக சீனியும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்