உருளைக்கிழங்கு புட்டு

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பில்லை - 5 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கினை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லையை மிகவும் பொடிதாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பினை வதக்கவும்.
அதன் பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து உருளைக்கிழங்கினை நன்றாக கையினால் மசித்து அதில் சேர்க்கவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
அனைத்தும் நன்றாக சேர்த்து கிளறவும். மிதமான தீயில் 2 -3 நிமிடம் வதக்கவும்.
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு புட்டு ரெடி.


இதனை சாப்பத்தி, பூரி, தோசை வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதனை காரக்குழம்பிற்கு கூட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா இன்று உருளைகிழங்கு புட்டு செய்தேன் சாம்பார்க்கு நல்ல மேச் ஆகும்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா.
அன்புடன்,
கீதா ஆச்சல்