ரெட் பூரி

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 2 கப்
காரட் - 100 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி + பூரி பொரிக்க


 

முதலில் காரட்டினை தோலினை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொண்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் மைதாவுடன் , எண்ணெய் , சிறிது உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள காரட்டினை சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் தேவையெனில் சிறிது சேர்த்து பிசையவும்.
பின்னர் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.


குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் சில குறிப்புகள்