பானகம்

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதுப்புளி - 2 எலுமிச்சம்பழ அளவு
கருப்பட்டி - 1/2 கப்
சுக்குப்பொடி - 1/4 ஸ்பூன்
ஏலப்பொடி - 1 சிட்டிகை


 

புளியைக் கரைத்து, தூசி இல்லாமல் வடி கட்டிக் கொள்ளவும். கருப்பட்டியைத் தூளாக்கி அதில் கரைக்கவும். சுக்குப் பொடி, ஏலப் பொடி சேர்க்கவும்.


இதை ஸ்ரீ ராம நவமியன்று செய்து, நைவேத்தியம் செய்வார்கள். வெயில் காலத்தில் தாகம் தணிக்கவும், உடலுக்குக் குளிர்ச்சி தரவும் மிகவும் ஏற்றதொரு பானம். வெயில் காலத்தில் நீர்க் கடுப்பு/நீர் சுருக்கு பிரச்னை ஏற்பட்டால், 2 மணி நேரத்துக்கொரு முறை இந்த பானகத்தை குடித்தால் சரியாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் வெல்லம்தான் போட்டு பண்ணுவேன்.

வெள்ளி கிழமை அம்பாளுக்கு நேவேத்தியம் இதுதான்!

பனை வெல்லம் போட்டு பண்ணி பாக்கரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...