இட்லி சாம்பார் (குழந்தைகளுக்கு)

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 3 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (தேவையானல்)
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியை மிகவும் பொடிதாக அரிந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின் சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
அதன் பின் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பினை 1 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்தவுடன் பெருங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மஞ்சள்(சாம்பார்), சிவப்பு(தக்காளி) மற்றும் பச்சை நிறம்(கொத்தமல்லி, கறிவேப்பில்லை) என பல கலர் இருப்பதால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்