இறால் பக்கோடா

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - கால் கிலோ
கடலை மாவு - 100 கிராம்
அரிசிமாவு - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2-4 பல்
சில்லி பவுடர் - அரை ஸ்பூன்
மஞ்சல் தூள் - அரை ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மில்லி


 

இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாய் கட் செய்யவும்.
பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக கட் செய்யவும்.
இறால், கட் செய்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஒன்றாக கலந்து, கடலை மாவு, அரிசிமாவு, சில்லி பவுடர், மஞ்சள் தூள், உப்பு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சேர்த்து, மாவு உதிர்ந்துவிடும் அளவுக்கு பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து பக்கோடாவை உதிர்த்து போட்டு, பிரட்டி சிவந்த நிறமாக வந்ததும் எடுக்கவும்.
சுவையான இறால் பக்கோடா ரெடி.


மேலும் சில குறிப்புகள்